தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின. இதை எதிர்த்து இன்று (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டனப் போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம் தலைமை தாங்கினார். அதே போல், மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் தலைமையேற்று போராட்டத்தினை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பெ. சண்முகம், ``இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்கவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு வன்மையான கண்டனத்திற்குரியது. சிபிஎம் போராட்டம்`இனி மா.செ எண்ணிக்கை 110. அதிகபட்ச வயது 70; பதவிகளுக்கு புது ரூல்ஸ்!' - திமுக செயற்குழுவில் அதிரடி கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் அடிப்படையில், கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு சம்பவம் இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. தலைமைச் செயலாளரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமாகச் செயல்படும் அவர், தலைமைச் செயலாளர் என்ற உயர் பதவியில் நீடிப்பதற்கு தகுதியுமற்றவர். ஆகவே, 'தமிழக அரசு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்". என்றார். `சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/cpm-to-hold-statewide-protests-against-tamil-nadu-government




