மும்பை, ஹார்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து விலகும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படும் நிலையில், ஹார்திக் பாண்டியா மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணி நிர்வாகமும் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து ஆரம்பத்தில் ஆலோசனையில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய கேப்டன் சுப்மன் கில்லுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஹார்திக் மீண்டும் குஜராத் அணிக்கு வந்தால் கேப்டன்பதவியும் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்ததாகவும், இதை குஜராத் அணி ஏற்கவில்லை. இதனால் இந்த மாற்றம் சாத்தியமாகாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், ஹார்திக் எந்த அணியையும் நேரடியாக தொடர்புகொண்டு வீரர் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/ipl-hardik-pandya-in-the-gujarat-team




