சென்னை, குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- உயிர்காக்கும் மருந்துகள் சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுகாதாரத்துறை? பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படை தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? உறுதி செய்ய வேண்டும் இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேட துடிக்கும் அக்கறையை குழந்தைகளின் உயிர்களை காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-ensure-uninterrupted-supply-of-medicines-for-children-kanimozhi-mp




