சென்னை, 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. வேலைப் பளு வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் எனவும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் எனவும் தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. வார நாட்களில் மட்டும் இந்நிலையில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாகவும், வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படுவதால் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 100 சார் பதிவாளர் அலுவலகங்களும் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்றும், சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லோகேஷ் கடந்த திமுக ஆட்சியில் சனிக்கிழமைகளில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி கைவிடப்படுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்த நிலையில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எங்கிருந்தும் பதிவு கடந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டபோது, வணிக வரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன்படி வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும். பதிவுத்துறை "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது. சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி, பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சனிக்கிழமைகளிலும் தொடர்ந்து ஆவணப் பதிவு மேற்கொள்வதால் அலுவலகப் பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவுக்கு அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், சார்பதிவாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சேவைகளின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 100 சார்பதிவாளர் தற்போது அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப்பணி முறையானது கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/100-sub-registrar-offices-will-no-longer-function-on-saturdays-government-order-issued




