நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நாளை மறுநாள் நியூயார்க்கில் தொடங்குகிறது. இதில் இடம் பெறும் கலப்பு இரட்டையர் பிரிவு இந்த முறை முன்கூட்டியே புதிய புள்ளி அடிப்படையில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா -ஜாகுப் மென்சிக் ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து)-பிளவியா கோபோலி (இத்தாலி) இணையை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முச்சோவா, மென்சிக் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-muchova-jakupovic-pair-crowned-champions




