வாஷிங்டன், இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். விசா நடைமுறையில் மாற்றம் குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கடந்த கல்வியாண்டில் 3.63 லட்சம் இந்திய மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு கல்வி பயிலும் காலம் நிறைவடைந்து கூடுதலாக 2 ஆண்டுகள் வரை மாணவர் விசா காலம் நீட்டிப்பு வழங்கப்படும். அந்த காலத்தில் மாணவர்கள் தங்கள் விசாவை ஹெச். ஒன். பி. விசாவாக மாற்றிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர் விசாவில் வந்தவர்கள் படிப்பு நிறைவடைந்து அமெரிக்காவில் கூடுதலாக காலம் தங்கி இருக்க வழங்கப்படும் சலுகைக்கு இனி 1 லட்சம் டாலர்கள் கட்டணம் வசூலிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இந்திய மாணவர்கள் - விண்ணப்பம் சரிவு இந்நிலையில், நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. விசா நடைமுறையில் அமெரிக்கா கொண்டுவந்த மாற்றமே இந்திய மாணவர்களின் விண்ணப்பம் குறைந்ததற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/decline-in-indian-students-applying-for-us-undergraduate-degrees




