சென்னை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி, வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர்.நிர்மல்குமார், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-hold-talks-with-sanitation-workers-in-chennai-regarding-their-demands




