சென்னை, மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக்கை இன்று சென்னையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சந்திப்பு இந்த சந்திப்பின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் அனுராக்மிஸ்ரா, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் அலர்மேல்மங்கை ஆகியோர் உடனிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-minister-meets-union-minister-of-state-shripad-naik




