புதுடெல்லி, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்தை காக்க போராடிய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "இந்தியாவைப் பாதுகாப்பதில் காட்டிய அசாத்தியமான துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புக்காக நமது தேசம் வீரமிக்க ராணுவ வீரர்களுக்கு இன்றைய நாளில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மிகக் கடினமான சூழல்களிலும் அவர்கள் வெளிப்படுத்திய வீரம் என்றென்றும் தேசத்தின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமை உணர்வும் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/kargil-vijay-diwas-the-nation-expresses-gratitude-to-the-brave-soldiers-prime-minister-modi




