சென்னை, தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-1-pm-in-11-districts




