சென்னை, சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், கடந்த 7-ந்தேதி மாலை பணியில் இருந்த 20 வயது செவிலியரிடம், 60 வயதான மருத்துவர் செய்யது முஷ்டாக் அகமது என்பவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த செவிலியர் கூச்சலிட்ட நிலையில், சத்தம் கேட்டு சக ஊழியர்கள் உடனடியாக சென்று செவிலியரை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் அடிப்படையில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-of-attempted-misconduct-with-a-nurse-in-chennai-60-year-old-doctor-arrested




