சென்னை, மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. செயல்படுத்தியதாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க. செயல்படுத்தியதாகவே உள்ளது! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/did-the-change-mean-a-change-in-name-kanimozhi-mps-criticism




