கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய டோரதி திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘டோரதி’ திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்கள் வைரல் சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ வெளியாகி வைரலானது. இளையராஜா இசையமைத்துள்ள இப்பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இத்திரைப்படத்தின் 2வது பாடலான ‘முத்துமணி’ வெளியாகி உள்ளது. இந்த பாடலை இளையராஜா, ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளார். பாடல் வரிகளை இளையராஜாவே எழுதியுள்ளார். பின்னணி இசை வெளியீட்டு விழா ‘டோரதி’ திரைப்படத்தின் பின்னணி இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இத்திரைப்படத்தின் பின்னணி இசையை இளையராஜா வெளியிட்டார். இதில், 18 பின்னணி இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. பின்னணி இசை ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றன. டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா ‘டோரதி’ படத்தை டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றிருந்தனர். இந்த நிலையில், டொரண்டோவில் ‘டோரதி’ படத்தை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்கள். Still taking in this night. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dorothy-wins-accolades-at-toronto-international-film-festival




