சென்னை, சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்த நாளை, இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகிறது. இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- சென்னை நாள் எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது. வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம். சென்னை நாள் வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-cherish-and-preserve-the-history-of-chennai-kanimozhi



