விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 269 மதுபான பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத் தணிக்கை மயிலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் தலைமையில், ஐவேலி முருகன் கோவில் அருகே வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் வந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவர் கைது விசாரணையில், பேரணி அஞ்சல் கெண்டியாம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் திருநாவுக்கரசு (42) மற்றும் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் மகன் சுரேஷ் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைப்பு கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 269 மதுபான பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-smuggling-liquor-from-puducherry-269-bottles-seized



