கோவை, கோவை மற்றும் ஈரோடு ரெயில் டெப்போக்களில் பராமரிக்கப்படும் ரெயில்கள், பிட் லைன்கள் மற்றும் யார்டுகளில் பூச்சி, பெருச்சாளி உள்ளிட்டவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரெயில் டெப்போக்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கும் பணிகளுக்காக ரூ.2.15 கோடி மதிப்பில் இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் ரெயில் பெட்டிகள் மற்றும் டெப்போக்களில் பூச்சி, பெருச்சாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பிட் லைன்கள் மற்றும் யார்டுகளிலும் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பயணிகள் அச்சமின்றியும், எவ்வித சங்கடமும் இன்றியும் பயணம் செய்யும் வகையில் ரயில்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/travel-without-fear-without-embarrassment-new-measures-to-maintain-trains-hygienically




