சென்னை, டிஎன்பிஎல் தொடரில் இன்றைய 26-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக்கிற்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது திருச்சி. டிஎன்பிஎல் 8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது 2-ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணியின் தொடக்க வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 191 ரன்கள் குவித்த திருச்சி திருச்சி அணியின் பேட்டர்களில் சஞ்சய் யாதவ் 40 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய எஸ். ஷியாம் சுந்தர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். மேலும் கேப்டன் சுரேஷ் குமார் 10 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார். இறுதியில் அதிரடியாக விளையாடிய ராஜ்குமார் 8 பந்துகளில் 15 ரன்களும், ஜாபர் ஜமால் 6 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் இலக்கு இதையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெற 192 ரன்கள் என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-trichy-sets-a-target-of-192-runs-for-chepauk




