மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் தலசரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். தலசரி பகுதியில் உள்ள சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக 2 பைக்குகளில் 6 இளைஞர்கள் வந்துள்ளனர். இளம்பெண் பாலியல் வன்கொடுமை அந்த இளைஞர்கள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணின் நண்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை பைக்கில் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து இளம்பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. 4 பேர் கைது இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள எஞ்சிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/maharashtra-young-woman-kidnapped-gang-rape-shocking-incident




