தவெக அரசு மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்க்கவில்லை என்றும், கேள்வி கேட்கவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அந்தப் பதிவு. 2021-2026-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதியைக் குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும் எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் - திமுக நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை! மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிமம் எடுக்க முயற்சித்தபோது, “நான் முதல்வர் பதவியை இழந்தாலும்” அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, தமிழக மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின். தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டுசென்றதைக் கண்டித்துத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டுவருவதற்குத் தைரியம் இருக்கிறதா சி.எம் சார்? ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால், ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரத் துணிவிருக்கிறதா சி.எம் சார்? 2021-2026 ல் ிமுக ஆட்சியில் இருந்த போது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறு வரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் நிதியை… — M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) August 30, 2026 பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என்று சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற ஆண்மை இருக்கிறதா சி.எம் சார்? திமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குச் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதல் பெற்றுச் சட்டப்படி தடை செய்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்று ஆன்லைன் லாட்டரி விற்பனைத் தடைச் சட்டம் கொண்டுவர இயலாத சுயநலவாதியாக இருக்கிறீர்களா சி.எம் சார்?" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/appavu-questions-tvk-government-stand-on-centre-policies




