கே.ஆர்.எஸ். அணை கர்நாடகத்தில் காவிரி படுகையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா வில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. இந்த நிலையில் குடகில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இடைவிடாது கன மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிக ரித்த வண்ணம் உள்ளது. கடந்த 25-ந்தேதி வினாடிக்கு 4 ஆயிரத்து 478 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயி ரத்து 438 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பு இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 17 ஆயிரத்து 427 கனஅடியாக உள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.30 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் 108.63 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. அதாவது 49.452 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று காலை நிலவரப்படி 31.770 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அணை யில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 514 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணை அதே நேரத்தில் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 487 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 676 கனஅடியாக குறைந்துள்ளது. ஆற்றில் இருந்து வலது, இடது கால்வாய்களில் வினாடிக்கு 1,660 கனஅடி நீரும், ஆற்றில் வினாடிக்கு 6,100 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,272.76 அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டி.நர சிப்புரா அருகே ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. அதன்படி நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 10 ஆயிரத்து 614 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 10 ஆயிரத்து 806 கனஅடி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/continuous-heavy-rain-in-the-cauvery-catchment-area-inflow-to-krs-dam-increases




