புதுடெல்லி, கர்நாடகாவை சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்ற பா.ஜனதா பிரமுகர், அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருமானத்துக்கு பொருந்தாதவகையில் சொத்து சேர்த்த புகார் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டுகளை சரிபார்க்குமாறு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/hearing-today-in-the-disproportionate-assets-case-against-rahul-gandhi




