திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்த விவரம் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி ( என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளை கரைக்கும் இடங்கள் சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள். வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக. இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறியப்பட்ட தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, செங்கம் பச்சை யம்மன் கோவில் குளம், கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராவதி குளம், பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/locations-for-the-immersion-of-vinayagar-idols-in-tiruvannamalai-district




