நெல்லை, வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் அவர்கள் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாதுகாப்பில்லாத நிலை குடிநீர் பிரச்சனைக்காகப் போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளது. இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்களை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-is-safe-under-the-tvk-regime-kanimozhi




