ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஜஹொன் மாவட்டம் சென்னுரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜிதபோனியா வெங்கையா. ஜேசிபி ஆபரேட்டரான இவர் நேற்று மதுபோதையில் ஜஹோன் மாவட்ட பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். கைது பஸ்சை 21 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற வெங்கையா, சிங்கராஜுபள்ளி பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பஸ்சை மோதியுள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/drunk-man-steals-bus-in-telangana-drives-21-km-before-crashing-into-toll-gate




