சென்னை, அமலா பால் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "ஆடை திரைப்படத்தின் கதைக்கு தேவையாக இருந்ததால் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். முதலில் இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் நம்புவதற்கு கொஞ்ச காலம் ஆனது. இப்போது இருக்கும் புரிதலுடன் மீண்டும் ‘ஆடை’ போன்ற ஒரு கதையில் அப்படி நடிக்கச் சொன்னால் நான் மறுத்துவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அமலா பால். வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆடை’ திரைப்படம் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடை’. இப்படத்தில் அமலா பால் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகளில் அவர் ஆடையின்றி நடித்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “முதலில் இயக்குநரை நம்புவதற்கு நேரம் ஆனது” இந்த நிலையில், ‘ஆடை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து அமலா பால் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “ஆடை திரைப்படத்தின் கதைக்கு தேவையாக இருந்ததால் ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். முதலில் இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் நம்புவதற்கு கொஞ்ச காலம் ஆனது. இந்தப் படம் வெறும் நிர்வாணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதா? அல்லது அதன் பின்னணியில் இருக்கும் உணர்வை வெளிப்படுத்துவதற்காக எடுக்கப்படுகிறதா? என்ற குழப்பம் எனக்கு இருந்தது” என்றார். “மீண்டும் அப்படி நடிக்கச் சொன்னால் மறுத்துவிடுவேன்” மேலும் அவர் கூறும்போது, “ஒரு கட்டத்தில், இந்தக் காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதன்பிறகே நிர்வாணக் காட்சிகளில் நடித்தேன். படப்பிடிப்பின்போது மிகக் குறைவான நபர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். படக்குழுவினரும் என்னை மிகவும் சிறப்பாக கையாண்டனர்.” என்று தெரிவித்தார். தற்போதைய தனது புரிதல் குறித்து பேசிய அமலா பால், “இப்போது இருக்கும் புரிதலுடன் மீண்டும் ‘ஆடை’ போன்ற ஒரு கதையில் அப்படி நடிக்கச் சொன்னால் நான் மறுத்துவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/if-asked-to-act-like-that-again-i-would-refuse-amala-paul-speaks-boldly



