திருவனந்தபுரம், கேரளம் உள்துறை மந்திரி ரமேஷ் சென்னித்தலா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளத்தில் போதைப்பொருளுக்கு எதிராக, அதன் உறைவிடங்களை கண்டறிந்து வேரோடு களைய அரசு உறுதி கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆபரேஷன் துபான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்கள் பங்களிப்பு மூலம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் போதைப்பொருளை ஒழிக்க கேரளம் போலீஸ் டி.ஜி.பி., தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில டி.ஜி.பி.க்கள் உடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) நான் முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்பு கொண்டு பேச உள்ளேன். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கும். ஏற்கனவே, இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் கலந்துரையாடினேன். ஆபரேஷன் துபான் திட்டத்தின் கீழ். போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/kerala-home-minister-to-meet-chief-minister-vijay-today




