கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அலிபூர் உயிரியல் பூங்கா உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி, நரி உள்பட பல்வேறு விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இந்த பூங்காவில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு கொல்கத்தா மாநகராட்சியில் செயல்படும் இறைச்சிக்கடைகளில் இருந்து மாட்டிறைச்சி உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் மாட்டிறைச்சி கடைகளுக்கான உரிமத்தை புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மாட்டிறைச்சி கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. ஆட்டிறைச்சி இந்நிலையில், மாட்டிறைச்சி கடைகளுக்கான உரிமத்தை புதிப்பிக்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் பூங்காவில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாட்டிறைச்சி கிடைக்கததால் அதற்கு பதில் ஆட்டிறைச்சியை பூங்காவுக்கு ஒப்பந்ததாரர்கள் அனுப்பி வைக்கின்றனர். மாட்டிறைச்சியின் விலை கிலோ ரூ. 270 முதல் ரூ. 350 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆட்டிறைச்சி கிலோ ரூ. 700 முதல் ரூ. 750 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூங்கா நிர்வாகத்தின் செலவு அதிகரித்து வருகிறது. மேலும், விலங்குகளுக்கு வழக்கமான அளவை விட குறைவான அளவிலேயே ஆட்டிறைச்சியை பூங்கா ஊழியர்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/goat-meat-fed-to-lions-and-tigers-in-park-due-to-beef-shortage




