வாஷிங்டன், உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் முன்னேறின. 16 அணிகள் பங்கேற்ற ரவுண்ட் ஆப் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்த சுற்றில் வெற்றிபெற்ற 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. காலிறுதி சுற்றுக்குள் நுழைந்த 8 அணிகள் விவரம்:- பிரான்ஸ் மொராக்கோ ஸ்பெயின் பெல்ஜியம் நார்வே இங்கிலாந்து அர்ஜெண்டினா சுவிட்சர்லாந்து காலிறுதி சுற்றில் மோதும் அணிகள் விவரம்:- பிரான்ஸ் vs மொராக்கோ ஸ்பெயின் vs பெல்ஜியம் நார்வே vs இங்கிலாந்து அர்ஜெண்டினா vs சுவிட்சர்லாந்து காலிறுதி சுற்றில் வெற்றிபெறும் 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும். அதன்பின்னர், அரையிறுதியில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது உச்சபட்ச பரபரப்பான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/fifa-world-cup-which-teams-have-qualified-for-the-quarterfinals-full-details




