சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி பொன்னம்பலம், முன்னணி அமைப்புகள், பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் தியாகத்தையும், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-minister-rajesh-kumar-pays-floral-tributes




