சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்சரிவு காரணமாக திங்கள்கிழமை இந்தச் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் திட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 25 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள படேல் இன்ஜினியரிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்புப் பணிகளை வேகப்படுத்த மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் எங்களது திட்டக் குழுவினர் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு மேலும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கருவிகள் மற்றும் உதவிகளை உடனடியாக வழங்கியுள்ளதாகவும், சுரங்கப்பாதையைச் சீரமைத்து மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக உள்ளே செல்வதற்கு எங்களது பொறியாளர்கள் குழு இரவு பகலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தத் துயரமான சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக நிறுவனம் மேலும் கூறியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/accidents/reports-indicate-that-10-people-have-lost-their-lives-in-landslide-in-state-of-sikkim



