சென்னை, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ விரிவுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், அதற்கான தொடக்க விழா தேதி மாற்றப்பட்டுள்ளது. 22-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைப்பதாக இருந்த காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் தொடக்க விழா, தற்போது வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய், விரிவாக்கப்பட்ட திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். 6 முதல் 8-ம் வகுப்பு தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக நடுநிலைப்பள்ளி மாணவர்களும் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். 15.30 லட்சம் மாணவர்கள் பயன் இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15,30,141 மாணவர்கள் பயன்பெற உள்ளனர் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். 2 மாவட்டங்கள் இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-expansion-change-of-inauguration-date




