திருச்சி, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திமுகவில் சிறப்பாக செயல்படுவோரை குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் சோதனை நடத்துகிறார்கள். அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுகவினரை அச்சுறுத்த தவெக அரசு முயற்சிக்கிறது. தவெக அரசின் சோதனைகளை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம். சோதனையை சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து வெற்றிபெறுவோம். அன்பில் மகேஸை பார்ப்பதற்கு கூட காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை. என்று கூறினார். முன்னதாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் அன்பில் மகேஷ் வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் கே.என்.நேரு காத்திருந்தார். சிறிது நேரம் காத்திருந்த நிலையிலும் அன்பில் மகேஸை சந்திக்க கே.என்.நேருவுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவரிடம் செல்போனில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/raids-are-being-conducted-with-the-intention-of-intimidation-kn-nehru-alleges




