டமாஸ்கஸ், சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடைபெற்றது. இந்த உள்நாட்டு போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. வெடி விபத்து - 14 பேர் பலி இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணம் சர்மடா நகரில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/siriya-ayutha-semippu-kidangil-bayankara-vedi-vipathu-14-per-pali




