பெரிதாக மேக் அப் கூட போடாமல் நடிப்பதையே வாடிக்கையாக கொண்ட சாய் பல்லவி எளிமையான வாழ்க்கை முறை, சத்தான உணவு மற்றும் இயற்கை சார்ந்த பழக்கவழக்கங்களே மேற்கொண்டு வருகிறார். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சாய் பல்லவி, தனக்கனெ தனி பாணியை திரைத்துறையில் கடைபிடித்து வருகிறார். தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே கமிட் ஆகும் சாய் பல்லவி, கவர்ச்சியாக நடிப்பதை அறவே தவிர்த்து வருகிறார். பெரிதாக மேக் அப் கூட போடாமல் நடிப்பதையே சாய் பல்லவி வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். எளிமையான வாழ்க்கை முறை, சத்தான உணவு மற்றும் இயற்கை சார்ந்த பழக்கவழக்கங்களே அவரது பொலிவான சருமத்தின் ரகசியம் என கூறப்படுகிறது. சாய் பல்லவி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, சத்தான உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வது அவரது அன்றாட நடைமுறையாக உள்ளது. இவை உடல்நலத்துடன் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.மேலும், அதிக ரசாயனங்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை தவிர்த்து, இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிப்புற அழகை விட தன்னம்பிக்கையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுமே உண்மையான அழகை வெளிப்படுத்தும் என்பதும் சாய்பல்லவியின் கருத்தாக உள்ளது. சாய் பல்லவியின் இந்த எளிய அணுகுமுறையே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்பல்லவி திரைப்பட நிகழ்ச்சிகளிலும் புடவையில் வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அரைகுறை ஆடைகளை தவிர்த்து பாரம்பரியமான ஆடையான சேலையை அணிந்து வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராமாயணம் படத்தில் சாய்பல்லவி: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள படம் ‘ராமாயணா: பகுதி 1’. இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைத்துள்ளார். 'தங்கல்' படம் மூலம் சர்வதேச கவனம் ஈர்த்த நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்கியுள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மட்டுமல்லாமல் சன்னி தியோல், ப்ரியாமணி, ராகுல் ப்ரீத் சிங், ரவி துபே எனப் பலரும் நடித்துள்ளனர். தொலைக்காட்சி தொடராக வெளியான ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவில், இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார். சீதை கதாப்பாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘ராமாயணா: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு நேற்று அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் வெளியானது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-secret-behind-sai-pallavis-beauty-that-has-captivated-fans-hearts-do-you-know-what-it-is




