வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம், சான் பிரான்சிஸ்கோ யுனிகான்ஸ் அணிகள் மோதின. வாஷிங்டன் வெற்றி இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணி 19.3 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்புடன் ஆடிய அந்த அணியின் கேப்டன் மேத்தியூ ஷாட் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் அணியின் ஜாக் எட்வர்டு 3.3 ஓவரில் 13 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வாஷிங்டன் 18.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ யுனிகான்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாஷிங்டன் பிரிடம் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்கள் சேர்த்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/washington-freedom-beats-san-francisco-unicorns-match-in-major-league-cricket




