துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் - இலங்கை இத்தொடரில் நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 19.5 ஓவரில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனைகள் மைதிலி, சேதன விமுக்தி அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை வெற்றி இதையடுத்து, 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 7.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய இலங்கை கேப்டன் சாமரி அத்தபத்து 48 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-sri-lanka-beat-uae




