சென்னை, சட்டசபை வளாகத்தில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. முறையாக கூட்டணி வைக்காதது, பிரிந்தவர்களை மீண்டும் இணைக்காதது, தேர்தலில் தோற்றதற்கானமுக்கிய காரணம். தன் மீதுள்ள தவறை மறைப்பதற்காக தற்போது பொய் பரப்பிக் கொண்டிருக்கிறார். எங்கள் மீது வீண் பழி போடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். திமுக ஆதரவோடு முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயன்றார். அதை ஏற்க எங்க எங்களுக்கு மனமில்லாததால், திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தோம். அதையும் ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் தவெகவை ஏன் ஆதரிக்கக் கூடாது எனக்கேட்டேன். அதையும் ஏற்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராகுல்காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளராக அவரே இருக்கட்டும். தேர்தல் தோல்விக்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி ஆராய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/tamilnadu-election-2026-webstories/defeat-in-the-assembly-election-cv-shanmugam-levels-a-barrage-of-accusations-against-edappadi-palaniswami




