தனுஷ் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் ‘தனுஷ் 56’ திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம் சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன. ‘டியூட்’ மூலம் திரையுலகில் அறிமுகம் சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மார்ஷல்’, அட்லியின் ‘ராக்கா’ படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமானார். சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’ சமீபத்தில் வெளியானது. இந்த இசை ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் சாய் அபயங்கருடன் நடனமாடியுள்ளார். தனுஷின் 55வது திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகர் மம்முட்டியும் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்த ‘அலேக்கா லோவா’ முதல் பாடல் வைராலாகி வருகிறது. தனுஷின் 56வது திரைப்பட இசையமைப்பாளர் இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் ‘தனுஷ் 56’ திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக சாய் அபயங்கர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sai-abhayanka-to-compose-music-for-dhanushs-56th-film




