சென்னை, மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளதால், சென்னை வரும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மும்பையில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு இன்று (7-ந்தேதி, செவ்வாய்கிழமை) புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22159) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கல்யாண், இகத்புரி, மன்மாட், அங்காய் மற்றும் டவுண்ட் வழியாக இயக்கப்படுகிறது. இதேபோல், மும்பையில் இருந்து இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.52 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட வேண்டிய சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157), நாளை (8-ந் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு தாமதமாக புறப்படும். இந்த ரெயில் 4 மணி நேரம் 38 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-mumbai-trains-bound-for-chennai-diverted




