கொழும்பு, இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போது முத்திரை பதிப்பார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சனத் ஜெயசூர்யா கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவர் அவசரப்பட்டு இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு இன்னும் நீண்ட பயணம் காத்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது, நிச்சயமாகத் தனது முத்திரையைப் பதிப்பார்” என்றார். ஜிம்பாப்வே தொடரில் அசத்தல் வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 42 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய அவர், 151 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்தார். மேலும், அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதையும் வைபவ் சூர்யவன்ஷி வென்றார். இதனால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/his-time-will-come-sri-lankan-legend-jayasuriya-speaks-openly-about-vaibhav-suryavanshi




