அமராவதி, வங்கக் கடலில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு ஆந்திர மாநிலம் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மேலும் கஜுவாகா, மங்கலபேலம், சாகர் நகர், அரிவோலா, அப்புகார் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது காக்கிநாடா கடற்கரையில் இருந்து கடலில் சுமார் 225 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/45-magnitude-earthquake-in-the-bay-of-bengal-tremors-felt-in-andhra-pradesh




