காஷ்மீர், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. எனினும் அவ்வப்போது மழையும் பெய்து இதமான சூழலை உறுதிப்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த பருவத்துக்கான பனிப்பொழிவு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட குல்மார்க் உள்ளிட்ட பகுதிகளில் முதலாவது பனிப்பொழிவு நேற்று காணப்பட்டது. இதைப்போல பந்திப்போரா மாவட்டத்தின் துலைல் பள்ளத் தாக்கு, காபூலி காலி போன்ற குரேஸ் செக்டார் பகுதிகளிலும் மலைப்பிராந்தியங்களில் மெல்லிய பனியடுக்கு காணப்பட்டது. காஷ்மீரின் உயரமான மலைப்பகுதிகளில் உள்ள வேறு சில இடங்களிலும் லேசான பனிப்பொழிவு காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாவின் சொர்க்கபுரியாக விளங்கும் காஷ்மீரில் பனிப் பொழிவு தொடங்கியிருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/snowfall-has-begun-in-kashmir




