2026-ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் காலடி எடுத்து வைக்கிறோம் இன்று. இன்று (ஜூலை 1) முதல் இந்திய நிதித் துறை சார்பாக நாம் என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும் இங்கே பார்த்துவிடுவோம். வாங்க... > ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வலைதளம் மற்றும் UMANG ஆப் ஆகியவை முழுவதும் அப்கிரேட் செய்யப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி (PPF)ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன? இந்த அப்கிரேடிற்குப் பிறகு, இந்த வலைதளம் மற்றும் ஆப்பில் அனைத்து சேவைகளையும் விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்று கூறப்படுகிறது. EPFO மற்றும் UMANG ஆப்பின் அப்கிரேட் வெர்ஷன் நாளை (ஜூலை 2, 2026) முதல் ஓபனாகிறது. > வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை, ஆதார் வலைதளம் மற்றும் ஆப்கள் மூலம் ஆதாரில் இமெயில் ஐ.டியை கட்டணமில்லாமல் அப்டேட் செய்துகொள்ள முடியும். இந்த வசதி இன்று முதல் முடிவடைவதாக இருந்தது. ஆனால், தற்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது. > கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.2,500 ஆகவும், தட்கல் பாஸ்போர்ட் ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு விலை பட்டியலையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். > ITR-1 மற்றும் ITR 2-க்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதி வருகிற ஜூலை 31-ம் தேதி. இந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், எந்த அபராதமும் இருக்காது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் | ITR Filingஅரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்? > வங்கிகள் தவறான வாக்குறுதிகளை அளித்து நிதி சார்ந்த திட்டங்கள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதைத் (Mis-selling) தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பித் தரப்படுவதோடு, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும். இதுவும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/personal-finance/july-1-financial-changes-epfo-aadhaar-passport-itr-updates



