மதுரை, பழனி கோவில் நிலமோசடி தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், "திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது. அத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர். போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ’ என்று கூறினார். இந்த நிலையில், கட்டிங் வாங்கியவர் என அமைச்சர் நிர்மல்குமார் தன்னை விமர்சித்ததற்கு, முன்னாள் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்து கூறியதாவது:- அமைச்சர் நிர்மல்குமார் என் மீது பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுகிறார். ஆதாரமின்றி எதையும் சொல்லக் கூடாது. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? நிர்மல்குமார் பொறுப்பு வகிக்கும் சட்டத்துறையிலேயே பிரச்சனை உள்ளது. 200 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்று கூறினார்கள்; ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்; அமைச்சர் நிர்மல்குமார் தினந்தோறும் செய்தியாளர்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறார் கோயிலுக்குச் சொந்தமான 1 சென்ட் நிலத்தைகூட பதிவு செய்யக்கூடாது என பதிவேட்டில் இருக்கும். திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சு. எதார்த்தமா நடந்ததுனு சொன்னா ஏத்துக்க முடியாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-temple-lands-were-registered-during-the-dmk-regime-former-minister-murthy




