தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவியை அவதூறாக பேசி தாக்கியதுடன், சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு அச்சுறுத்திய தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர். 2-வது திருமணம் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தந்தை இறந்துவிட்டதால், தாய் கைபயார் என்பவர் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநரான முகம்மது அபுபக்கர் சித்திக் (34) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கல்லூரி மாணவியை தாக்கிய ஓட்டுநர் முகம்மது அபுபக்கர் சித்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியையும், அவரது மகளையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கைபயார் தனது மகளுக்கு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த முகம்மது அபுபக்கர் சித்திக் ஆத்திரமடைந்து, மாணவியை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு மிரட்டல் மேலும் ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு 2 பேரையும் மிரட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அலறி சத்தமிட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முகம்மது அபுபக்கர் சித்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கைது, சிறையில் அடைப்பு இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முகம்மது அபுபக்கர் சித்திக்கைக் காவல்துறையினர் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/driver-arrested-for-threatening-college-student-by-opening-cooking-gas-cylinder




