நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்கள் – வெற்றிப் பயணத் திட்டம் மற்றும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் சிலிண்டர்கள் திட்டம். இந்த இரண்டு திட்டங்களுமே தவெக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட திட்டங்களே. தேர்தல் வாக்குறுதியில் இந்தத் திட்டம் எப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அது எப்படி அறிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில் பயன்பெறத் தகுதிகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம். அரசு பேருந்துOperation Economic Outcast: 'ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்' - அமெரிக்கா கொடுக்கும் சாய்ஸ்கள் என்னென்ன? வெற்றிப் பயணம் இது தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் திட்டம் சொல்வது என்ன? இந்தத் திட்டத்தின் கீழ், மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாகப் புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், பெண்கள் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். தகுதிகள் என்ன? இந்தத் திட்டத்தில் பெண்கள் பயன்பெற எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அதாவது வருமான உச்சவரம்பு, பயண எண்ணிக்கைகள் என எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இந்தத் திட்டத்தில் திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பயணங்கள் மேற்கொள்ளலாம். தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டிருந்தது என்ன? அரசுப் பேருந்து சேவைகள் அனைத்திலும் பெண்களுக்கான இலவசப் பயணம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டின் எந்தவொரு மூலையிலிருந்தும் எந்தவொரு பகுதிக்கும், மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களைக் கடந்து, எவ்வித நிதியச் சுமையுமின்றிப் பெண்கள் பயணிக்க முடியும். அத்துடன், நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, பேருந்துகளின் வசதியை மேம்படுத்துவதற்கான சூழலையும் நாங்கள் உருவாக்குவோம். சிலிண்டர்Gold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா? அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் இந்தத் திட்டம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டம் சொல்வது என்ன? அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகத் தமிழ்நாடு அரசால் வரவு வைக்கப்படும். தகுதிகள் என்ன? ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாயக் குடும்பத்தினர், மாற்றுத் திறனாளிக் குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது. தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டிருந்தது என்ன? இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு ஆறு எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வங்கி"தடைகள் வருவது தெரியும்; அதற்காகவே ஈரான் தயார் செய்த திட்டம்!" - ஈரான் சொல்லும் பிளான் என்ன? நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய்மார்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக இந்த முன்னெடுப்பை அறிமுகப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழகம் பெருமிதம் கொள்கிறது. தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் அறிவித்திருந்த திட்டத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தை அப்படியே அமல்படுத்திவிட்டு, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தை மட்டும் சில மாற்றங்களுடன் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/vetri-payanam-annapoorani-schemes-what-are-the-benefits



