சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. தங்கம் விலை நேற்று முன்தினம் நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையே விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,19,520-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,940-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. இதன்படி வெள்ளி கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dipped-slightly-what-is-the-situation-today-2




