சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ. கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழிமறித்த ஒரு கும்பல் ஒன்று கணவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றதாக உறவினர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் சுஜிதாஸ்ரீ. பூபதியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சுஜிதாஸ்ரீயின் நடவடிக்கைகளால் சந்தேகம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அவரிடமே விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எதிர்வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததைக் கண்டறிந்து கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்தோம் எனத் திடுக்கிட வைத்திருக்கிறார். சுஜிதாஸ்ரீ, சந்தோஷ் ராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்தத் தம்பதியின் 13 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அனுப்பி வைத்துள்ளனர். சந்தோஷ் ராஜ் மட்டுமின்றி பூபதியின் நண்பர்கள் பலருடனும் திருமணம் தாண்டிய உறவில் சுஜிதா இருந்து வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கைதான சுஜிதாஸ்ரீ இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த ஓமலூர் காவல்துறையினர், "செங்கல் சூளை உரிமையாளரான பூபதியின் வீட்டிற்கு தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுடன் ரகசியமாகப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுஜிதாஸ்ரீ, திருமணம் மீறிய தகாத உறவில் இருந்து வந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூபதி அடிக்கடி கண்டித்து வந்திருக்கிறார். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் பல ஆண்களுடன் ரகசிய உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார். எதிர் வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடனும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து விவகாரம் தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பூபதியின் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்ததுடன், சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்து கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். தன்னுடைய 13 வயது மகனையும் இந்தக் கொடூர கொலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். கொலையை மறக்கவே சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடியிருக்கிறார்" என்றனர். நெல்லை: குடிநீர்க் குழாயில் தண்ணீர் வராததால் ஆத்திரம்; பஞ்சாயத்து தலைவர் அடித்துக் கொலை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/salem-secret-affairs-with-multiple-men-horrific-fate-of-husband-who-reprimanded-her




