பிரித்விராஜின் ‘கலிபா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சக்சஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான ‘கலிபா’ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘டர்போ’ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். ஜினு ஆபிரகாம் இதற்கு முன்பு பிருத்விராஜ் நடித்த 'ஆடம் ஜோன்', 'கடுவா' உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி லண்டனில் தொடங்கிய ‘கலிபா’ படத்தின் படப்பிடிப்பு, லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. View this post on Instagram சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லால் தங்க கடத்தலை பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக உருவான இப்படத்தின் டீசர், டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளார். படத்தின் வசூல் அறிவிப்பு இந்நிலையில், பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘கலிபா’ படம் முதல் வாரத்தில் ரூ40 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சக்சஸ் டீசர் வெளியீடு திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் ‘கலிபா’ படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது ‘கலிபா’ சக்சஸ் டீசரை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. - Success Teaser. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prithvirajs-khalifa-film-success-teaser-out




