லண்டன், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி2, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இங்கிலாந்து, இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்தும், முதல் வெற்றியை பதிவு செய்ய இலங்கையும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-england-vs-sri-lanka-clash-tomorrow




